மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ் அப்டேட்

141

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ஒருசில காட்சிகளை படமாக்க இன்று பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்தினம் திடீரென படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். காரணம் என்னவென்று இதுவரைக்கும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுவரை படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடம் எதிர்பாரப்பை ஏற்படுத்தும் விதமாக விரைவில் மேக்கிங் வீடியோவை வெளியிட தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.