• Apr 25 2024

அஜித்தை கட்டியணைத்தபடி புகைப்படம் வெளியிட்ட ஷாலினி-வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்  அஜித். தனக்கான ஒரு பாணியில் சினிமாவில் கலக்கி வரும் இவர் எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டாதவராகவும் இருந்து வருகின்றார்.எனவே இவர் எப்போது சமூக வலைத்தளங்களில. இணைவார் என இவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இவரது நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுககு வெளியாகும் என்றும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

 இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகவும் ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.



 தற்போது முதன்முறையாக நடிகை ஷாலினி சோசியல் மீடியா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.  இன்ஸ்டாகிராமில் ஷாலினி எண்ட்ரி கொடுத்துள்ள தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த தகவல் வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், தற்போது வரை நடிகை ஷாலினியை 36 ஆயிரம் பேர் வரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ஷாலினியை கட்டிப்படித்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement

Advertisement