• Apr 25 2024

லால் சலாம் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா

stella / 11 months ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படம் லைகா தயாரிப்பில் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்க ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கிறார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டரையும் அவரது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அதன்படி மொய்தீன் பாய் என்ற பவர்ஃபுல் கேரக்டரில் நடித்து வருகிறார் ரஜினி. பாட்ஷா படத்திற்குப் பிறகு ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 


இதனிடையே மும்பையில் ரஜினி நடித்த பிரம்மாண்டமான சண்டைக் காட்சி மூன்று தினங்களாக படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சந்தித்துக்கொண்ட போட்டோ வைரலானது. கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று வந்த கபில் தேவ் ரஜினியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் லால் சலாம் படத்தின் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement