• Nov 28 2022

லைலாவுடன் ராதிகா சரத்குமார் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- குவியும் லைக்குகள்

Listen News!
stella / 6 days ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் 2000ம்-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் லைலா. இவர் விக்ரம் அஜித் சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானார்.மேலும் இடையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதால் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.


தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து நல்ல படவாய்ப்பிற்காக காத்திருக்கின்றார்.


இந்த நிலையில் இவர் நடிகை ராதிகாவுடன் எடுத்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் ராதிகாவும் சமீபத்தில் வெளியான  வெந்து தணிந்தது காடு, லவ் டுடே ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.


அதே போல  வெள்ளிக் கிழமை வரவிருக்கும் பட்டத்து அரசன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இதில் அதர்வா கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.