• Feb 04 2023

கடைசி வார நாமினேஷன்..பெட்டியுடன் கிளம்பும் போட்டியாளர் யார்?

Listen News!
Aishu / 3 weeks ago
image

Advertisement

Listen News!

 பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷனில் அமுதவாணனைத்தவிர அனைத்துப்போட்டியாளர்களும் சிக்கி உள்ளார். மேலும் இதில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும்  ஆவலுடன் உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராதா நேரத்தில் ரச்சித்தா வெளியேறினார். மேலும் அவர் வீட்டில் எதுவுமே செய்யாமல் இருந்த போதேல்லாம் ரசிகர்கள் வாக்களித்து காப்பாற்றினார்கள்.ஆனால், கடைசி நேரத்தில் ரச்சித்தா அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாகவே செய்தார்.எனினும் குறிப்பாக சைக்கிள் டாஸ்கில், இரவு முழுவதும் தூங்காமல் அவர் சைக்கிள் ஓட்டியதைப்பார்த்து ரசிகளே ஆச்சரியப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் டிக்கெட்டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது.மேலும் இதில், ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் சிறப்பாக டாஸ்குகளை விளையாடி வந்தார். நாமினேஷனில் இருந்த அமுதவாணன் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார். டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் பெற்றி பெற்று பெற்றதால் அவர் எமினேட் ஆகவில்லை. இதனால் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ரச்சித்தா பலிகாடாக மாறி வெளியேறினார்.

எனினும் இதையடுத்து பிக் பாஸ் சீசன் 6ன் கடைசி நாமினேஷன் நேற்று நடைபெற்றது. ஷிவின் அசீமை நாமினேஷன் செய்தார், அதே போல வீட்டில் இருந்த அனைவருமே அசீமையை நாமினேட் செய்தனர். ஆனால், வழக்கமான விக்ரமனை நாமினேட் செய்யும் அசீம்.மேலும் இந்த முறை நான் அசீமை நாமினேட் செய்யவில்லை ஏன் என்றால், அவர் என்னைவிட பொறுமையாக இருக்கிறார். தேவையில்லாமல் அவர் கோவப்படவில்லை என்று கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வைத்தார்.

இதையடுத்து, இந்த வார நாமினேஷன் முடிவில் இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றிருக்கும் அமுதவாணனைத் தவிர அசிம், விக்ரமன், சிவின், கதிரவன், ஏடிகே, மைனா நந்தினி ஆறு போட்டியாளர்களுமே  நோமினேட் ஆகியிருக்கிறார்கள்.எனவே இறுதி வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வி ரசிகர்களில் எழுந்துள்ளது.

அதில்,அசீம், விக்ரமன்,ஷிவினுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது இதனால், அவர்கள் வெளியேற வாய்ப்பே இல்லை என்பதால், இந்த வாரம், ஏடிகே, கதிர், மைனா டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். அத்தோடு, இந்த வாரத்தில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. அதுதான் பணப்பெட்டி டாஸ்க் இதில் வரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.அத்தோடு பணப்பெட்டியை மைனா நந்தினி இல்லாவிடில் கதிரவன் எடுத்து செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது. இதனால், இந்த வாரம்,பணப்பெட்டி, பொங்கல் கொண்டாட்டம் என வீடே கலகலப்பாக இருக்கப்போகிறது.

Advertisement

Advertisement

Advertisement