• Apr 25 2024

இத்தனை வருட பழக்கத்தை குழந்தைகளுக்காக கை விட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 38வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.இவரக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நயன்தாரா தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எந்த ஒரு ஷூட்டிங் பணிகள் இருந்தாலும், அதனை தவிர்த்து விட்டு காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டுக்கு சென்று, டேட்டிங் செய்து கொண்டே பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.


இந்த முறை குழந்தைகளைக் கொண்டு வெளிநாடு செல்வது கடினம் என்பதை உணர்ந்து சென்னையிலேயே பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றாராம்.அத்தோடு இவர் நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரும் இன்றைய தினம் வெளியாகவுள்ளது.


இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.அதாவது நயன்தாரா தனது முகத்தில் குழந்தைகள் முத்தம் கொடுப்பதால் முகத்தில் மேக்கப் போடுவதை முற்றாகத் தவிர்த்து விட்டாராம். மேக்கப் போடாததால் முன்பை விட தற்பொழுது அழகாக இருக்கின்றார் என விக்னேஷ் சிவன் பெருமையாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

 

Advertisement

Advertisement

Advertisement