• Mar 29 2024

பெண்கள் கண்டிப்பா இத பண்ணுங்க, உங்களுக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும்!- தொகுப்பாளினி டிடி கொடுத்த ப்ரீ அட்வைஸ்ட்

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில், 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் திவ்ய தர்ஷினி. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வரும் தனித்துவமான ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

அதே போல் டிடி எப்படி பட்ட உடை அணிந்தாலும், அந்த உடையில் அழகு தேவதை போல் பிரகாசிப்பவர். ட்ரடிஷ்னல் உடையாக இருந்தாலும்... மாடர்ன் உடையாக இருந்தாலும் அதற்கேற்றாப்போல் நகைகள் அணிவது வேற லெவல் அழகு எனலாம்.


முன்னணி தொகுப்பாளினியாக இவர் இருந்த போதே, தன்னுடைய நீண்ட நாள் காதலரும், நண்பருமான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆன சில வருடங்கள் மட்டுமே இவர்களின்... திருமண வாழ்க்கை நீடித்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

திருமணத்திற்கு பின்னர், சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்த துவங்கினார் திவ்ய தர்ஷினி. அந்த வகையில் பா.பாண்டி, துருவ நட்சத்திரம், மற்றும் காபி வித் காதல் போன்ற சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் இவருக்கு அண்மையில் விருது ஒன்று கிடைத்தது. அதில் பெண்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கின்றார்.


அதாவது பெண்களுக்கு வாழ்க்கையில் எப்படியான கஷ்டம் வேணும் என்றாலும் ஏற்படலாம். திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருக்கலாம். லவ் பெஃய்லியராக இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் கடந்து நீங்க உங்க வேலைய டைம்முக்கு எழும்பி செய்தும் போது உங்களால் எதையும் சாதிக்க முடியும் டைமுக்கு எழும்புவது என்பது நல்ல விடயம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement