• Mar 29 2024

ஹரிஷ் கல்யாணுடன் அட்டக்கத்தி தினேஷ் இணையும் ‘லப்பர் பந்து’ - வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ஹரிஸ் கல்யாண். இவர் தற்பொழுது  வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது டீசல், தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிடு ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் ஹரிஷ் கல்யாண். அப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர் நடிக்கும  புதிய திரைப்படத்திற்கு ‘லப்பர் பந்து’ என பெயரிட்டுள்ளனர். இதில் அட்டக்கத்தி தினேஷும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். 


லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்க உள்ளார். இவர் கடந்த ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற வதந்தி என்கிற வெப் தொடரில் வெலோனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.


லப்பர் பந்து திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ள நிலையில், தற்போது டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப்பார்க்கும் போது இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படம் என்றும் தெரிகிறது.

Advertisement

Advertisement

Advertisement