சந்தீப் கிஷனுக்கு ஜோடியான குஷி ரவி!

506

கன்னடத் திரைப்படமான “தியா” என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை குஷி ரவி. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புக்காக காத்திருந்த குஷி ரவிக்கு அடிபொலி என்ற வீடியோ ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“மானே ஒமானே…” என்ற அந்தப்பாடலில் அஸ்வினுடன் இணைந்து கலக்கலாக பெர்மான்ஸ் செய்த குஷி ரவி இப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கிலிருந்து நடிகர் சந்தீப் கிஷனுடன் ஜோடியாக நடிக்க குஷி ரவிக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் நிலையில் தெலுங்கு திரையுலகிலும் இந்த படமூடாக குஷி ரவி அடியெடுத்து வைத்துள்ளார்.