• Apr 23 2024

குன் -நன் ...! ஐஸ்வர்யா ராய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்..! லைக்ஸினை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியின்போது தான் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய் த்ரிஷாவின் பெயரை சொல்லும்போது மை டியர் என ஒத்த வார்த்தை சொன்னது குந்தவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் தான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நன் மற்றும் குன் என தெரிவித்துள்ளார் த்ரிஷா.குந்தவை த்ரிஷாவை நான் செல்லமாக குன் என்று தான் அழைப்பேன் என கூறினார் வந்தியத்தேவன் கார்த்தி. அதனால் குந்தவை குன்னாகிவிட்டது. நந்தினியை நன்னாக்கிவிட்டார் த்ரிஷா.

குந்தவை, நந்தினி என்று அழகான பெயர்களை இப்படி குன், நன் என்று சொல்லாதீர்கள் த்ரிஷா. இரண்டு அழகிகள் ஒரே ஃபிரேமில். கண்ணுபடப் போகுது, சுத்திப் போடுங்கள். கார்த்தி கூட சேர்ந்து த்ரிஷாவும் இப்படியாகிவிட்டார்.

ஒழுங்காக குந்தவை எண பேசிப் பழகுங்கள். நன், குன் ஏதோ ஜப்பானிய பெயர் போன்று இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு ரூ. 10 கோடி சம்பளமாம்.முன்னதாக பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் ஏன் கலந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

ஹைதராபாத் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் பெயரை சொல்லி அவரின் கையை ஐஸ்வர்யா ராய் லேசாக தொட்டதும் அருண்மொழி வர்மனுக்கு ஒரே வெட்கம் தான். மேலும் ஜெயம் ரவியின் கையை பிடித்துக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த ஐஸ்வர்யா ராய் தெரியாமல் அவர் மீது இடித்துவிட்டார்.அதற்கு அவ்வளவு சந்தோஷப்பட்டு குதித்தார் ஜெயம் ரவி. அதை பார்த்து ஐஸ்வர்யா ராய் சிரித்த வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் தான் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் என ஜெயம் ரவி கூறிய வீடியோவை நந்தினியின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகவிருக்கிறது பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தை போன்றே இதுவும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. குறைந்தது ரூ. 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது., ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement