• Dec 01 2023

குக்வித் கோமாளி சீசன் 4 கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளதா?- புகைப்படத்துடன் மணிமேகலை கொடுத்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. சன் மியூசிங் ஆங்கர், விஜே என்பதை எல்லாம் தாண்டி இன்று குக் வித் கோமாளி மணிமேகலை என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஃபேவரெட் கோமாளியாக மாறி விட்டார் எனலாம். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனக்கென தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.


அந்த வகையில் தற்பொழுது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது குக்வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளராகக் கலந்து கொண்ட முத்துக்குமாரின் திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.


இவருடன் குக்வித் கோமாளி சீசன் 3 பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நீண்ட நாளைக்குப் பிறகு இவர்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்த்ததால் எப்போது குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement