• Apr 19 2024

பிங்க் நிற ஆடையில் கேபியின் கியூட் டான்ஸ் - வைரல் வீடியோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்திப் பின்னர் சினிமாவில் நுழைந்தவர் கேபிரில்லா.  இவர்  திரை நட்சத்திரமாக நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படத்தில்  சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அந்தப் படம் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து  அப்பா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஈரமான ரோஜாவே சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் .இதில் காவ்யாவாக அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

அந்தவகையில் சமூகவலைத்தளங்களில்ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்  தற்போது அழகான உடையில் தேவதை போன்று நடனமாடி கியூட்டான டான்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு இதம்  அளித்ததுடன், தனது டான்ஸ்ஷை திருப்ப திருப்ப பார்த்து ரசித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement