• Apr 01 2023

விக்ரமின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்ட இனியா- எடுக்கப்போகும் முடிவு என்ன?

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

சன்டிவியில் புத்தம் புதிதாக ஆரம்பித்து சூப்பர் ஹிட்டாக ஊடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இனியா. இந்த சீரியல் அடுத்தடுத்தாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

மேலும் போலீஸாக இருக்கும் விக்ரம் திருந்தி விட்டதாக எண்ணி இனியா விக்ரமைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததோடு தற்பொழுது ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்கின்றது.


இப்படியான நிலையில் இனியா தனது நண்பியான சோனாலியை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் விக்ரம் இனியாவுக்கு தெரியாமல் சோனாலியின் வாழ்க்கையை அழித்து விட்டார். இது ஒன்றையும் அறியாத இனியா சோனாலி சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக எண்ணி விடுகின்றார்.

இப்படியான நிலையில் இனியாவுக்கு போன் பண்ணி சோனாலி விக்ரம் பற்றிய உண்மைகளை சொல்லி விடுகின்றார். அத்தோடு விக்ரம் தீவிரவாதியென  கடத்தி வைத்திருந்த நபரும் தப்பி வந்து இனியாவிடம் விக்ரம் பற்றிய உண்மைகளை சொல்லி விடுகின்றார்.இதனால் இனியா விக்ரமைத் திருமணம் செய்தாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருவதையும் காணலாம்.









Advertisement

Advertisement

Advertisement