நடன இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநர் மற்றும் நடிகராகவும் மாறியவர் ராகவா லாரன்ஸ். முனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இயக்குநர் அடையாளத்தையும் ராகவா லாரன்ஸ் உருவாக்கி கொண்டார்.
கடைசியாக, காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான் லக்ஷ்மியை இயக்கி இருந்த லாரன்ஸ், தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா, அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதிலும் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!