• Apr 19 2024

அப்பாவை அடிச்ச வில்லனுக்கு தங்க மோதிரம் போடும் கார்த்தி- விருமன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சூர்யா- ஜோதிகாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விருமன். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்திலும் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் நாளை முதல் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டடமாக வெளியாகவுள்ளது.இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் SNEEK PEEK காட்சி வெளியாகி உள்ளது. தாசில்தார் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தை அடித்த சுரேஷ் கதாபாத்திரத்திற்கு நடிகர் கார்த்தி தங்க மோதிரம் போடுவது போல இந்த காட்சி அமைந்துள்ளது. நடிகர் சூரி மற்றும் கார்த்தியின் நடனத்துடன் இந்த காட்சி துவங்குகிறது. பிரகாஷ் ராஜ் கோபப்பட்டு துப்பாக்கி எடுப்பதுடன் இந்த காட்சி நிறைவடைகிறது. சிங்கம்புலி மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் இந்த காட்சியில் தோன்றியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement