இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, சச்சின் கடேகர், ரோகிணி, பழம்பெரும் நடிகை லட்சுமி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
முதல் நாளில் இந்த படம் அதிகபட்சமாக 16 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளதாக கூறி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பங்கம் செய்து வருகிறார்.
அதாவது இந்த படம் முற்றிலுமாக ஃபெயில் ஆகிடுச்சு என குண்டை தூக்கி போட்டு சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் சந்தோஷத்தையே கெடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
கொஞ்சம் கூட படம் உப்பு சப்பு இல்லாத கதை என்றும் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. விஜய் தேவரகொண்டா மட்டும் நல்லா நடிச்சிருக்காரு, மத்தபடி படத்தில் ஒன்றுமே இல்லை என வழக்கம் போல வச்சு செய்துள்ளார்.
Listen News!