• Apr 25 2024

மதத்தோடு அந்த விடயத்தை ஒப்பிட்ட குஷ்பு..பெரும் சர்ச்சையை கிளப்பிய விசயம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கிரிக்கெட் விளையாட்டை மதத்தோடு ஒப்பிட்டு பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், பிரபு, விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.சினிமாவை தொடர்ந்து சின்னத்திரையில் கால் பதித்து, அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.எனினும்  தற்போது குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார் குஷ்பு.

இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டிலான குஷ்பு, அரசியல், நடிப்பு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அத்தோடு கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இவர் நடித்திருந்த அண்ணாத்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.எனினும்  சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார் குஷ்பு. ரஜினியின் முன்னால் ஹீரோயினான குஷ்புவிற்கு இந்த படத்தில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்திருந்தனர்.



அத்தோடு அண்ணாத்த படத்தில் கும்முனு இருந்த குஷ்பு அதன்பிறகு கிட்டத்தட்ட 20கிலோ எடையை குறைத்து சின்னத்தம்பி குஷ்பு போல மாறியுள்ளார். இதனால், தினம் தினம் இணையத்தில், புகைப்படத்தை  ஷேர் செய்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் எடை குறைப்பின் ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள் என ரசிகர்களுக்கும், கேட்டு வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல், குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவுக்கு 21 வயதாகிறது. 21 வயது பெண்ணுக்கு அம்மா போன்றே  அவரைப் பார்த்தால்தெரியவில்லை. அந்த அளவுக்கு இளமையாக தெரிகிறீர்கள் குஷ்பு.



இவ்வாறுஇருக்கையில் ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற ஜிகேஆர்சி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு குஷ்பு, டாஸ் போட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேட்டிங்கும் செய்துள்ளார். இந்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த குஷ்பு, நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, மதமும் கூட. நான் ஒரு பெரிய கிரிக்கெட் ஆர்வலராக இருப்பதால், விளையாட்டைப்பற்றி ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் தெரியும். அதனால் நான் டாஸ் போடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.



அத்தோடு குஷ்புவின் இந்த பதிவினை பார்த்து டென்ஷன் ஆன இணையவாசிகள் என்னது, கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, மதமா... கிரிக்கெட் விளையாட்டு என்பது ஜாதி, மதம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அதை எப்படி மதத்தோடு ஒப்பிட்டு பேசுவீர்கள் என்று இணையவாசிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement