• Apr 25 2024

மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடிய கே ஜி எப் யாஷ்- அட்டகாசமான போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகத்தினரைத் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் தான் கேஜிஎஃப் . கன்னட இயக்குநர் பிரசாந்த்த நீல் இயக்கத்தில் வெளியான இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் யாஷ் நடித்திருந்தார்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியும் படவாய்ப்பைப் பெற்று நடித்து வருகின்றார்.


இப்படத்தின் இரண்டு பாகங்களிலும் இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.அத்தோடு இப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

யாஷ், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ராதிகா பண்டித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐரா என்ற மகளும், யாதர்வ் என்ற மகனும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் யாஷ், அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொள்வார். 


இந்நிலையில் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement