கே.ஜி.எஃப்: சாப்டர் 2 திரைப்படத்தின் திரை விமர்சனம்

கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் கடந்த 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1.ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்றைய தினம் அதிகாலையில் வெளியானது. அதன்படி அதன் கதைக் களம் என்ன என்று பார்ப்போம்.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யாஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் தொடர்கிறது.

கே.ஜி.எஃப்-பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் எதிரிகளை எதிர்த்து யாஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் கதை.

படத்தைப் பற்றிய அலசல்

கே.ஜி.எஃப். படத்தின் முதல் பாகத்தில் ராக்கி பாய் பவருக்கு வருவதை காட்டினார்கள். படம் முழுக்க ஸ்டைலும், மாஸுமாக இருந்தது. இரண்டாம் பாகத்திற்கு கொடுக்கப்பட்ட பில்ட்அப் படத்தில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது என்றே கூற வேண்டும்.

ஆனந்தின் மகன் விஜயேந்திரா கதை சொல்வதுடன் படம் ஆரம்பித்ததோடு ராக்கி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த யாஷ் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கே.ஜி.எஃப். மக்களை கவர்ந்துவிடும் ராக்கி. பெரிய கனவுகளுடன் மிக ஆபத்தான பாதையில் பயணிக்கிறார். அப்பொழுது தான் அதீராவை சந்திக்கிறார். கே.ஜி.எஃப்.ஐ ராக்கி பாயிடம் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறார் அதீரா.

அத்தோடு படத்தில் ராக்கி பாயின் எமோஷனல் பகுதியை காட்டியிருக்கிறார்கள். ராக்கியின் காதல், கடந்த காலம் குறித்து அழகாக காட்டியிருக்கிறார்கள். காதல் கதை ரசிக்கும்படி இருக்கிறது. அதீராவாக வரும் சஞ்சய் தத்தின் அறிமுக காட்சி மாஸாக இருக்கிறது.

பிரதமராக ரவீணா டாண்டனுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. சிபிஐ அதிகாரியாக வரும் ராவ் ரமேஷின் கதாபாத்திரமும் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மேலும் மாஸை எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றவர்களுக்கு பரம திருப்தி எனலாம்.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்