• Apr 19 2024

சினிமாவில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் சகோதரி...குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். மேலும் சிவகார்த்திகேயனின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த அவர் 'ரஜினி முருகன், ரெமோ' ஆகிய படங்களில் செம்ம க்யூட்டாக நடித்தமையை தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


இந்நிலையில் கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து தற்போது அவரின் சகோதரியும் சினிமாவில் கால் பதித்துள்ளார். அதாவது கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் என்பவர் பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். 


இதனையடுத்தி தற்போது அவர் குறும்படம் ஒன்றினை இயக்கி இருக்கிறார். அந்தவகையில் தேங்க் யூ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் ஃபஸ்ட் லுக் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரிக்கு வாழ்த்து கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.


கீர்த்தி சுரேஷின் சகோதரிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement