• Apr 18 2024

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டைட்டில் போஸ்டர் வெயிட்ட சமந்தா

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ்  கடந்த ஆண்டு நடித்த சாணி காயிதம், வாஷி மற்றும் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் கே.சந்துரு இயக்கும் ‘ரிவால்வர்’ ரீட்டா’ என்ற சுவாரஸ்யமான பெண்கள் சார்ந்த  திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் ''ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகை சமந்தா  வெளியிட்டார். இந்த போஸ்டரில், கீர்த்தி சுரேஷ் இரண்டு ரிவால்வர் துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற கார்டூன் போஸ் இருக்கிறது.



இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.இந்த படத்தை இயக்கும் இயக்குநர் கே.சந்துரு இதற்கு முன்பு, நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்திற்கு வசனம் எழுதியவர். இது தவிர நவீன சரஸ்வதி சபதம் படத்திற்குப் பிறகு ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த படத்தின் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், இப்படம் குறத்த ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஏற்கனவே 1970-ல் இதே தலைப்பில் ஒரு படம் வெளியாகியுள்ளது. அந்த படத்தில், பிரபல நடிகைகளான விஜயலலிதா மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.



இதனால், இந்த படத்தின் ரீமேக்கில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது உண்மையா என்பதை வரும் நாட்களில் ஆவலோடு வெயிட் பண்ணி பார்ப்போம்.

மேலும் இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement