• Mar 29 2024

மாறுபட்ட நடிப்பில் கீர்த்தி சுரேஷ் & நானி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தயாராகும் தசரா என்ற படத்தில் நானி நடித்து வருகிறார்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நானி நடிக்கும் தசரா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷின் BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நேச்சுரல் ஸ்டார் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமாக  'தசரா' அமைந்துள்ளது.நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடல் தூம் தாம் வரை நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியுள்ளது.

 நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.



இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக நடிக்கிறார். வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சில படங்கள் தான் நம் வீட்டு கதவை தட்டி - "ஏய், நான் உன் கிரீடத்தில் இறகாக அலங்கரிப்பேன் என சொல்லும்". அப்படி ஒரு படம் தான் எனக்கு தசரா". என கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்து வெளியிட்டுள்ளார்.



மேலும் நானியுடன் தான் இருக்கும் தசரா படத்தின் தோற்ற புகைப்படங்களையும், இயல்பான தோற்ற புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement