• Apr 19 2024

பெரியப்பாவின் தில்லாலங்கடி வேலையைக் கண்டு பிடித்த கயல்- பவித்திராவின் கர்ப்பத்தை கலைக்காமல் தடுப்பாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் மற்றுமொரு சீரியல் தான் கயல். தந்தை இல்லாமல் தன்னுடைய குடும்பத்தை  வழிநடத்தும் பெண்ணின் போராட்டத்தையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் கயலின் பெரியப்பா தன்னுடைய மகன் பவித்ரா என்னும் பெண்ணை காதலித்து ஏமாற்றியதோடு அவளின் கர்ப்பத்தை கலைப்பதற்காகவும் பவித்ராவுக்கு தெரியாமல் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றனர்.


கயல் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டல் என்பதால் கயலுக்கு பெரியப்பாவின் முழுக்குடும்பமும் பவித்ராவுடன் எதற்கு வந்திருக்கிறாங்க என்று சந்தேகம் எழுந்திருந்தது. இதனால் விசாரித்தபோது பவித்ரா கர்ப்பமாக இருக்கும் விடயமும் அதனை கலைக்கவே இவர்கள் இப்படியொரு நாடகம் போடுகின்றார்கள் என்ற விடயமும் தெரிந்து விட்டது. 

இதனால் கயல் இதனை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என யோசிக்கின்றார். ஆனால் இதனை எப்படி நிறுத்தப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement