• Jun 04 2023

திடீரென நெஞ்சில் சூடு பட்ட கயல் சீரியல் நடிகை..வெளியான வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை சைத்ரா ரெட்டி. தனது அக்கா குழந்தையுடன் கொஞ்சும் போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அவர், அடிக்கடி சீரியல் ஷூட்டிங் ரீல்களையும் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், கயல் சீரியலில் துப்பாக்கிச்சூடு எப்படி படமாக்கப்பட்டது என்கிற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி ஷேர் செய்துள்ளார்.

சீரியல் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். அத்தோடு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

அஜித் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வந்த அவர் தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

 அத்தோடு கயல் சீரியலின் மூலம் ஏகப்பட்ட இல்லத்தரசிகளை கவர்ந்து வரும் சைத்ரா ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கயல் சீரியல் நடிகையை துப்பாக்கியால் சுடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

ஹீரோயினையே சுட்டுட்டாங்களே, சீரியலில் அடுத்து என்ன ஆகும் என்கிற பரபரப்பை ரசிகர்களுக்கு இந்த வீடியோ மூலம் கடத்தி உள்ளார் சைத்ரா ரெட்டி.

சீரியல்களிலும் சினிமாவிலும் டம்மி துப்பாக்கி மூலம் சுட்டவுடன் நடிகர்களின் நெஞ்சில் இருந்து எப்படி புகையும் ரத்தமும் வெடித்து கிளம்புது என்பதையும் அதற்கு பின்னணியில் நடக்கும் விஷயத்தையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் சைத்ரா ரெட்டி.அத்தோடு  அவர் வெளியிட்டுள்ள திரைக்குப் பின்னால் நடக்கும் நிகழ்வுகளை பார்த்த ரசிகர்கள் என்னம்மா நடிக்கிறீங்க அக்கா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 மேலும் பொதுவாக லீடு ரோலில் நடிக்கும் நடிகர்கள் இதுபோல இறக்கும் காட்சிகள் என்றால், அது கனவாகவே இருக்கும் என்பதை காலம் காலமாக சீரியல்களில் பார்த்து வரும் ரசிகர்கள், இதுவும் கனவு தானே என கலாய்த்து வருகின்றனர். இது கனவாக இருந்தாலும், அந்த காட்சிக்காக எந்தளவுக்கு உழைப்பை போட்டு நடிக்கின்றனர் அதை பாராட்டலாமே என சைத்ரா ரெட்டியின் ரசிகர்கள் பதில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement