• Mar 28 2023

தேவி கன்னத்தில் மாறி மாறி அறைந்த காவ்யா மற்றும் பிரியா.!- பரபரப்பான ஈரமான ரோஜாவே ப்ரோமோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் சற்று வித்தியாசமானது. இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் அண்ணன் பார்த்திக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் கடைசி நிமிடத்தில் கடத்தப்பட்டு விட்டிருந்ததால் அந்த பெண்ணின் தங்கை காவியாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். 

இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஏனென்றால் அவர் பார்த்தியின் தம்பி ஜீவாவை காதலித்து வருகிறார். தம்பியை காதலித்து விட்டு அண்ணனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று அவர் இந்த திருமணத்திற்கு மறுக்கிறார். இருப்பினும் கட்டாயமாக அவருக்கு இந்த திருமணத்தை செய்து வைத்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்னர் பார்த்தியுடன் சுமுகமான வாழ்க்கையை காவியா வாழவே இல்லை. தொடர்ந்து விவாகரத்து கேட்டு பார்த்தியை அவர் மன சங்கடத்திற்கு ஆளாக்கி வந்தார். 


இருந்தபோதிலும் பார்த்தி எப்படியாவது காவியா மனதை மாற்றி அவருடன் இணைந்து வாழ்வேன் என்று சபதம் போட்டிருந்தார். இருப்பினும் அது கை கூடவே இல்லை. விவாகரத்திற்கு காவியா மனு செய்திருந்த நிலையில் கோர்ட்டில் இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பார்த்தியுடன் சேர்ந்து வாழ்ந்து பின்பு தான் உங்களுக்கு விவாகரத்து தர முடியும் என்று கூறி நீதிபதி அனுப்பி வைத்துவிட்டார். 

இதற்கிடையில் பார்த்தியின் அத்தை தேவி எப்படியாவது தனது மகளை பார்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்கு வரும் காவியாவின் தந்தையிடம் தேவி சில அநாகரிகமான வார்த்தைகளை கூறுகிறார். திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்த காவியா என்னென்ன கேவலமான செயல்களை செய்தாரோ என்று தேவி வார்த்தைகளை விடுகிறார்.இதனால் கோபமான காவியாவின் தந்தை இன்னொரு புருஷனை அடைய நினைக்கும் உன் மகள் தான் கேவலமானவள் என்று கூறுகிறார். இதனால் கோபமான தேவி காவியாவின் தந்தையை அறைந்து விடுகிறார். 


இந்த விஷயம் தெரிந்து காவியா மற்றும் பிரியா இருவரும் தேவியின் அறைக்கு சென்று தேவியை கன்னத்தில் மாறி மாறி அதை விடுகின்றனர். மேலும் தேவியை கீழே தள்ளிவிட்டு என் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. 


Advertisement

Advertisement

Advertisement