• Apr 20 2024

''டாடா'' படத்திற்கு பிறகு சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய கவின்.! எவ்ளோ தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கவின். இவர் சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். கவின் அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிச் சுற்று வரை முன்னேறினார். அதன் மூலமாக் அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது.

சமீபத்தில் இவர் நடிப்பில் "டாடா" திரைப்படம் வெளியானது. இதில் அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்தது. தற்போது டாடா அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இனி அவர் நடிக்கவிருக்கும் படங்களுக்கு சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement