• Apr 25 2024

துணிவு பட கலெக்சன் பற்றி கேட்டதால் கடுப்பான வாரிசு பட இயக்குநர்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குநர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

அஜித் மற்றும் விஜய் படங்கள் 8 வருடங்கள் கழித்து இருவரது திரைப்படங்களும் ஒன்றாக வெளியாவதினால் சமூகவலைத்தளத்தில் சரி, வெளியிலும் சரி பல சண்டைகளும் ஏற்பட்டன. திரையரங்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணனடிகள் உடைக்கப்பட்டன போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயற்சி செய்த்தனர். இதனால் அந்த இடங்கள் முக்குவதும் கலவர பூமியாக காட்சியளித்து. அத்தோடு ரோகினி திரையரங்கம் இந்த மோதலில் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

இவ்வாறுஇருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு வாரிசு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் வாரிசு விநியோகஸ்த்தர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சமூகவலைத்தளத்தில் அறிவித்தனர். இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயில் ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

ஏற்க்கனே வாரிசு திரைப்படத்தின் உலகளவிலான வசூல் 100 கோடியை தாண்டிய நிலையில் தெலுங்கு பட வெளியீட்டினால் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் 280 கோடி என்ற நிலையில் படம் முழுவதுமாக வெற்றியடைய இன்னும் வசூல் தேவைப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் தான் யார் இந்த பொங்கலுக்கு அதிக வசூல் செய்துள்ளார் என்ற அதிகாராப்பூர்வ தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் வாரிசு படம் 5 நாட்களில் 150 கோடியை வசூல் செய்துள்ளது நம்பா என்று அதிகாரப்பூர்ப அறிவிப்பை கொடுத்துள்ளது. எனினும் இந்நிலையில் தான் விஜய் நேற்று வாரிசு பட வெற்றிக்கு நட்சத்திர விடுதியில் வாரிசு படக்குழுவினருக்கு விருந்து வைத்தார். மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இப்படி பட்ட நிலையில் தான் வாரிசு வெற்றி விழாவும் நடைபெற்றது .இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் வம்சி படிப்பாளியிடம் வாரிசு துணிவு யார் வெல்வார் என்று கேட்கப்பட்டது .அதற்கு மிகவும் கோவமாக இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கிறன் என்றும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள் என்று கூறினார். இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் வசூல் அறிவிப்பு வந்த நிலையில் அடுத்து துணிவு படத்தின் வசூல் அறிவிப்பை துணிவு பட தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement