• Feb 01 2023

திடீரென மயங்கி விழுந்த கதிரவன்.. பதறிய ஹவுஸ்மேட்ஸ்..நடந்தது என்ன..?

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.இவ்வாறுஇருக்கையில் இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

மேலும் இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த நிறைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக் பாஸ் வீடு இருக்கிறது.

இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது.அத்தோடு  மறுபக்கம், ஒவ்வொரு போட்டியாளராக கொஞ்ச நேரம் பிக் பாஸ் ஆக மாறியும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் அப்படி பிக் பாஸாக மாறும் போட்டியாளர்கள், சக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஜாலியான அதே வேளையில் சற்று விறுவிறுப்பை எகிற வைக்கும் வகையிலும் சில டாஸ்க்குகள் மற்றும் சீக்ரெட் டாஸ்க்குகளை கொடுக்கின்றனர். எனினும் இப்படியாக இந்த வாரம் நிறைய சிறப்பான சம்பவங்களுடன் பிக் பாஸ் வீடு இயங்கி வருகிறது. அப்படி ஒரு சூழலில், நடுவே மைனாவும் பிக் பாஸாக செயல்படுகிறார்.


இவ்வாறுஇருக்கையில், திடீரென கதிரவன் மயங்கி விழுந்தார். ADK மற்றும் கதிரவன் ஆகியோர் நடந்து கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென கதிரவன் மயங்கி விழுகிறார். இதனைக் கண்டதும் பதறி போன ADK, "அசிம், அசிம் யாராச்சும் வாங்கப்பா" என பயத்தில் கத்தவும் செய்கிறார். உடனடியாக அசிம் உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரும் அங்கே வர, இது Prank என்றும் விக்ரமன் உள்ளிட்டோர் தெரிவிக்கின்றனர்.


ஆனால், கதிரவன் கண் திறக்காத நிலையில், "இது Prank இல்ல, நாக்கு தள்ளுது" என பயத்தில் பதறி போய் தெரிவிக்கும் ADK, பிக் பாஸ் மெடிக்கல் மெடிக்கல் என்றும் கத்துகிறார். ஆனால், மெடிக்கல் ரூம் அருகே சென்றதும் கதிரவன் எழுந்து Prank என்றும் தெரிவிக்கிறார். அதன் பின்னர், மைனா நந்தினி கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என்றும் தெரிவிக்கிறார்.


எனினும் இதனை அறிந்ததும் பதறியடித்த அனைத்து போட்டியாளர்களும் கதிர் மீது டென்சன் ஆகவும் செய்கின்றனர். "Good job" என பிக் பாஸாக இருக்கும் மைனா நந்தினி சொல்ல, "நீ வெளிய வா உனக்கு இருக்கு" என்றும் அசிம் தெரிவிக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement