• Mar 25 2023

பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி முடிவெடுத்த கரு பழனியப்பன்..நடந்தது என்ன..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கரு.பழனியப்பன்.இந்த படமே அவருக்கு சிறப்பான வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

இதனையடுத்து அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தார்.இதனையடுத்து மந்திர புன்னகை என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, கள்ளன், டி பிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் கரு பழனியப்பன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.



@ZeeTamil உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம்  என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! ..... நன்றி!  என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  ரசிகர்கள் ஏன் இப்படியொரு முடிவு..? என்ன நடந்தது என கேட்டு வருகிறார்கள்.



Advertisement

Advertisement

Advertisement