• May 29 2023

பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்க வந்த கார்த்தி கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பு

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து இரண்டாவது பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பொன்னியின் செல்வன் டீம் ரவுண்டு அடித்து வந்தது.


முக்கியமாக சீயான் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டி வருகின்றனர். இரண்டாம் பாகம் முழுவதும் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் சிலிர்க்க வைத்துள்ளதாம்.முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அனைவருக்கும் காட்சிகள் சமமாக இருந்தன என்றும் கூறப்படுகின்றது.


இப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்க்க கார்த்தி காசி திரையரங்கிற்குச் சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துள்ளார். அவரை உள்ளே செல்ல விடாமல் ரசிகர்கள் சுற்றி வளைத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement

Advertisement