• Apr 19 2024

ஒரே கப்பலில் ஒன்றாக..மலேசியா சென்ற கார்த்தி-அதிதி ஜோடி……வெளியான புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையினாலும், சிறந்த நடிப்பினாலும் இன்று வளர்ந்து வருகின்ற முன்னணி ஹீரோக்களில் ஒருவராக முன்னேறி இருப்பவரே நடிகர் கார்த்தி. இவரின் திரையுலகப் பயணமானது 2007 இல் 'பருத்தி வீரன்' என்ற படத்திலிருந்து ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், சிறுத்தை,கொம்பன், பிரியாணி' எனப் பல படங்களிலும் நடித்து பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற கார்த்தியின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'விருமன்'. இப்படத்தினை இவரது அண்ணனே தயாரித்து வருகின்றார்.

அதாவது தற்போது நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் இத்தம்பதியினர் தற்போது கார்த்தியின் 'விருமன்' என்ற படத்தையும் தயாரித்து உள்ளனர். அத்தோடு இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார்.

இப்படத்தில் கதாநாயகன் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அதிதி தமிழ் திரையுலகில் ஹீரோயினாக மட்டுமன்றி பாடகியாகவும் முதல் முதலில் அறிமுகமாகின்றார். இப்படமானது கிராமத்து கதையம்சத்தை மையமாகக் கொண்டமைந்திருப்பதோடு இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், வடிவுக்கரசி, ஆர்.கே.சுரேஷ் எனப் பல திரைப்பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படமானது ஆகஸ்ட் 12-ஆம் திகதி திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதனால் இப்படத்தை புரமோட் செய்யும் பணிகளும் படக்குழுவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இப்படத்தின் புரமோஷனுக்காக கார்த்தி மற்றும் அதிதி மலேசியாக்கு சென்றுள்ளனர். தற்போது இந்த ஜோடி அங்கு கப்பலில் பயணித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement