• Apr 25 2024

வசூலில் பெரும் நஷ்டத்தை சந்தித்த காப்பி வித் காதல் படம்..இவ்வளவு தானா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சுந்தர் சி தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 


மேலும் இவர் தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். 


மேலும்  மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.


அதுமட்டுமல்லாமல்  ரஜினிகாந்த்டைய அருணாச்சலம், கமல்ஹாசனுடைய அன்பே சிவம் மட்டுமின்றி நடிகர்கள் கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.


இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காப்பி வித் காதல். ஜீவா, ஜெய்,, ஸ்ரீகாந்த் என பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.கடந்த நவம்பர் 4ம் தேதி இப்படம் மாஸாக வெளியாகியது.


மேலும் படத்திற்கு நெகட்டீவ் விமர்சனங்கள் தொடர்ந்து வர படத்தின் வசூலும் நஷ்டத்தை சந்தித்தது 4 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement