• Apr 18 2024

திட்டியவர்களுக்கு கமலின் பிக் பாஸ் Costume டிசைனர் விட்ட சவால்...அப்பிடி என்ன தான் நடந்துச்சு..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன்  பிரமாண்டமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் இடத்தை அசிமும் இரண்டாம் இடத்தை விக்ரமனும் பிடித்திருந்தார் இறுதிப் போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளத்தில் பெரும் கேள்விக்கு உள்ளாகி இருந்தது.

அத்தோடு பிக் பாஸ் சீசன் 4ல் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வந்தார்.எனினும் அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார். அத்தோடு , நெசவுத் தொழிலாளகர்கள் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயனப்டுத்த போவதாக கூறி இருந்தார் கமல்.

இப்படியொரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டியின் போது நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார். எனினும் அதே போல போட்டியாளர்களுக்கு கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார். அத்தோடு கமலின் இந்த House Of Khaddar என்ற புதிய முயற்சியை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் விமர்சித்தும் வந்தனர். சீசன் 4ல் இருந்து தொடங்கு தற்போது வரை பிக் பாஸில் ‘House Of Khaddar’ ஆடைகளை தான் கமல் அணிந்து வருகிறார்.



அத்தோடு கடந்த 2 சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் தான் கமலின் ஆடைகளை அடிக்கடி கேலிக்கு உள்ளாகி இருந்தது. அதிலும் குறிப்பாக இந்த சீசன் இறுதி போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது. அந்த ஆடையில் வெள்ளை பெயிண்ட் ஊற்றியது போல இருந்ததால் நெட்டிசன்கள் பலரும் கமலின் இந்த ஆடையை சமூக வலைதளத்தில் கேலி செய்து வந்தனர்.


இப்படியொரு நிலையில் இந்த ஆடையை வடிவமைத்த அமிர்தா,, கமலின் இந்த குறிப்பிட்ட ஆடை குறித்து பேசி இருக்கிறார்.மேலும்  அதில் ‘இறுதிப்போட்டி என்பதால், கமல் சார் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம். இந்தமுறை ‘நான் டெனிம் போடுறேன். ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டும்’ என்றார் கமல் சார். அதனால்தான், கதர் டெனிமிலேயே ஜாக்கெட்டை வடிவமைத்தேன்’ எம்பிராய்டரி உட்பட அனைத்தையும் கையால் தான் வடிவமைத்தேன்.


ஆடையை வடிவமைத்த பின்னர் கலை இயக்குனர் ஜாக்சனிடம் ஆடையில் பெயிண்ட் செய்ய கொடுத்தேன். கலை இயக்குனர் ஜாக்சன் வடசென்னை அசுரன் போன்ற படத்திற்கு எல்லாம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.அத்தோடு  வட சென்னை படத்தில் நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது ஜாக்சன் எனக்கு நண்பரானார். நான் பெயிண்ட் செய்ய கொடுத்ததும் இரண்டே நாட்களில் ஆடைக்கு பெயிண்ட் செய்து கொடுத்துவிட்டார்.



மேலும் இந்த ஆடையை பார்த்ததும் கமல் சாரே ‘குட் ஜாப் என்று பாராட்டினார்’ அதுவே எங்களுக்கு போதும். சமூக வலைதளத்தில் இந்த ஆடையை பலரும் கேலி செய்வதை பற்றி கவலைப்பட எனக்கு நேரம் கிடையாது. இது எல்லாமே ஒரு கலை தான், அதை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும்.அத்தோடு  இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம், மிகவும் கடினம் பெயிண்டை ஆடை மீது ஊட்ரினால் அது எல்லா இடத்திலும் பட்டுவிடும் அதை எப்படி செய்கிறோம் என்பது தான் கலை’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement