• Apr 16 2024

அசீம் நிலைமையை நினைச்சாலே ரொம்ப பரிதாபமாக இருக்கு... பதிலுக்கு கமலையும் விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய தின வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்றில் நீங்க நினைச்சபடியெல்லாம் இங்கே நடக்கும்னு நினைக்காதீங்க என கடுமையான கோபத்துடன் அசீமை திட்டி உள்ளார் கமல். 


இதனைத் தொடர்ந்து வாரா வாரம் கமலிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அசீமை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் வைச்சு செய்து வருகின்றனர்.

அதாவது இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் "இவ்ளோவும் பண்ணிட்டு அசீம் நீங்க சேஃவ்ன்னு சொன்னா, அப்போ அசீம் பண்றது தான் சரி என்று மக்களுக்கு அதான் புடிக்குதுன்னு நினைச்சி ஒட்டுமொத்த ஹவுஸும் அசீம் பக்கம் போய்டுவாங்க. அப்புறம் பாக்கவே கேவலமா இருக்கும். நியாயம் பேசுறவன் கேவலமா நடத்த படுவான்.. இதான் இந்த சீசன்ல நடக்கும்" என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது இன்னொரு நெட்டிசன் "அசீம் வெரி எமோஷனலா இருக்காரு. பார்த்து என் கண்ணே கலங்கிடுச்சு. வருங்கால பூமர் அங்கிள்களின் நம்பிக்கை நட்சத்திரம்" எனக் கூறி அசீம் கதறி அழுவது போல ஒரு போட்டோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


இதேபோன்று மற்றோர் நெட்டிசன் "அசீமை முதல் வாரத்திலேயே ரெட் கார்டு கொடுத்து அனுப்பி இருக்கணும்" எனக் கூறியுள்ளார். அத்தோடு ஒவ்வொரு வாரமும் அறிவுரை மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டிய ஒரு நெட்டிசன்ஸ் "நீங்க நினைப்பது நடக்காதுனு சொல்லிட்டு மீண்டும் நீங்க சேஃவ்னு சொல்லுவீங்க" என்று கோபத்துடன் கமலை கண்டித்து கூறியுள்ளார்.



மேலும் கமல்ஹாசனிடம் வாரா வாரம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கும் அசீமை பார்த்த ஒருவர் "இவர் நிலைமையை நினைக்கவே ரொம்ப பரிதாபமா இருக்குல" எனக் கூறி வடிவேலு அடிவாங்கும் போட்டோவை மீம்ஸாக போட்டுள்ளார்.

இவை அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement