• Apr 26 2024

விஜய் மற்றும் சூர்யாவை வைத்து திரைப்படம் தயாரிக்கவுள்ள கமல் நிறுவனம்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டுமின்றி இதுவரை பல திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ராஜ் கமல் நிறுவனம் முன்னணி நட்சத்திரங்களின் படங்களையும் தயாரிக்கவுள்ளதாம். அதன் முதல்படியாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ஒரு படமும், தளபதி விஜய்யை வைத்து ஒரு படமும் கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இருவரிடம் கால்ஷீட் கேட்டபோது, இருவரிடம் இருந்தும் ஏறக்குறைய ஓகே என்பது போன்ற பதில் தான் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement