• Dec 07 2022

ADK-வை ராப் பாட வைத்து போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய கமல்-வைரலாகும் வீடியோ..!

ADK
Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

 பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து நேற்று சிங்கப்பூர் மாடல் நிவாஷினி எவிக்சன் செய்யப்பட்டார்.முன்னதாக பிக் பாஸ் போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே பேசிய கமல், ராஜா ராணி டாஸ்க்கில் நடந்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.எனினும் அப்போது அசீம் - ஏடிகே சண்டையின் பின்னணியில் இருந்த ரகசியங்களை அனைவரின் முன்பும் பேசவைத்து சில ட்விஸ்ட்களை கொடுத்தார் கமல்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6, கடந்த மாதம் 9ம் தேதி ஆரம்பமாகியது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், நேற்று நிவாஷினியும் எவிக்‌ஷன் செய்யப்பட்டார். முன்னதாக சென்ற வாரம் போட்டியாளர்கள் இடையே ராஜா - ராணி டாஸ்க் நடைபெற்றது.அத்தோடு  ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, ராஜகுரு, படைத் தளபதி, சேவகன், மக்கள் போன்ற கேரக்டர்களுடன் அரங்கேறிய இந்த டாஸ்க், தொடங்கிய அதே வேகத்தில் சண்டை சச்சரவுகளுடன் பொலிவிழந்தது.

அத்தோடு ராஜா - ராணி டாஸ்க் ஆரம்பத்தில், ராஜகுருவான விக்ரமன், படைத் தளபதியான அசீம் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதன்பின்னர் அசீம் - ஏடிகே இடையே சண்டை வந்தது. இதுதான் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டையும் சூடாக்கியது. அத்தோடு அருங்காட்சியகத்தில் திருடிய கதிருக்கு காலில் விலங்கு மாட்டிய ஏடிகே, அந்த சாவியை மறந்துவிட்டார். அசீம் அதனை எடுத்து வைத்துக்கொண்டதோடு, ஏடிகே பொறுப்பில்லாமல் விளையாடுவதாக ட்ரிக்கர் செய்தார். இதனால், கொதித்தெழுந்த ஏடிகே, அசீமிடம் பயங்கரமாக சண்டை போட்டார். ஒருகட்டத்தில் ஏடிகே நிதானம் இல்லாமல் சில வார்த்தைகளை விட்டதும் சர்ச்சையானது.

ஏடிகே ரொம்பவே உக்கிரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த போது அவரை சீண்டிய அசீம், இந்த ராப் எல்லாம் எங்கிட்ட காட்டத என நக்கல் செய்தார். இந்த பாயிண்டை நேற்று கையில் எடுத்த கமல், "அசீம் உங்களுக்கு ராப் இசைன்னா என்னன்னு தெரியுமா?. மேலும் அது விடுதலையின் குரல், ஆப்ரிக்கா, அமெரிக்காவில் நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக மிகப் பெரிய மக்களின் குரலாக ஒலித்தது ராப் பாடல்கள் தான். ராப் இசையின் வரலாறும் அதன் நீட்சியும் ரொம்பவே பெரிது" என்ற வகையில் டீட்டெயிலிங்காக பாடம் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கமல், "அசீமிடம் சண்டையிட்ட பிறகு பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என ராப் பாடி காட்ட வேண்டும் போல இருப்பதாக ஏடிகே சொல்லிருந்தீங்கள. அத இப்போ எல்லார் முன்னாடியும் பாடுங்க, நானும் பார்க்கணும்" என தெரிவித்தாா். உடனே தான் எழுதி வைத்திருந்த ராப் பாடலை உணர்ச்சிப் பெருக்க பாடிக் காட்டினார் ஏடிகே. 

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது முதல், இப்போது நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் நெற்றிப் பொட்டில் அறைந்தார் போல சுளீர் சுளீர் என்ற பாடல் வரிகளால் போட்டுத் தாக்கினார். ஏடிகே ராப் பாடிய போது பிக் பாஸின் கேமரா அசீமையே ஃபோக்கஸ் செய்தன.அத்தோடு எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போய் உக்கார்ந்திருந்தார் அசீம்.

ஏடிகேவின் இந்த ராப் பாடல் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் இம்ப்ரஸ் செய்தது. மேலும், ஏடிகேவும் எவிக்சனில் இருந்து சேவ் ஆனார். ஆனாலும், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எவிக்சன் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும் அசீம், இந்தமுறையும் தப்பிப் பிழைத்தார். அசீம் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரென எல்லோரும் நினைத்திருக்க, வழக்கம் போல அவர் சேஃப் செய்யப்பட்டு, நிவாஷினி எவிக்சன் ஆனார்.மேலும்  ஒருபக்கம் ஏடிகே மூலம் அசீமுக்கு பாடம் எடுத்த கமலை ரசிகர்கள் பாராட்டினாலும், அதெப்படி கடைசி நேரத்தில் அசீம் சேஃப் ஆகிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.