Monday, August 8, 2022

திடீரென தனது சம்பளத்தை 130 கோடியாக உயர்த்திய கமல்ஹாசன்- குற்றம் சாட்டும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் முக்கிய நட்சத்திரம் தான் கமல்ஹாசன். வித்தியாசமான வேறுபட்ட கதாப்பாத்திரங்களை தெரிந்தெடுத்து நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இவரது நடிப்பில் இறுதியாக விக்ரம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை இவரது தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் என்பதும் முக்கியமாகும். இப்படம் தமிழில் மட்டுமல்லாது ஏனைய மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்து வருகின்றது. இதனால் அவர் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி ஒரு படத்திற்கு 130 கோடி வரை கேட்டுள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு கமல் மட்டுமே காரணமல்ல என்றும் விஜய் சேதுபதி, பகத்பாசில், அனிருத், லோகேஷ் கனகராஜ் என பலரும் காரணம் இருக்கும்போது கமல் ஹாசன் இந்த படம் தன்னுடைய வெற்றி என்று நினைத்துக்கொண்டு அதிக சம்பளம் கேட்பதாக கூறி உள்ளனர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்