• Apr 19 2024

விஜய்யுடன் வீடியோ காஃலில் பேசிய கமல்ஹாசன்- இணையத்தில் தெறிக்க விடும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.  இந்த படத்தை தொடர்ந்து, விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67 வது படத்தில் நடிக்க உள்ளார். 

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்... இரண்டாவது முறையாக விஜய் தன்னுடைய 67 வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.


கேங்ஸ்டர் கதையம்சத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய்க்கு நிகராக நான்கு அல்லது 5 வில்லன்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்,  நடிகர் விஷால், கெளதம் மேனன், மிஷ்கின், மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் பெயர் அடிபட்டது.


மேலும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி விஜய்யுடன் கமல் வீடியோ காஃலில் பேசிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இதன் மூலம் தளபதி 67இல் கமல்ஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement