• Apr 20 2024

சூர்யாவைத் தொடர்ந்து கேமியோ ரோலில் நடிக்கும் கமல்ஹாசன்- அடடே இந்த மாஸ் ஹீரோவின் படத்திலா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகின்றார்.

 இப்படத்தை முடித்த கையோடு கமலின் அடுத்த படத்தை வினோத் இயக்கவுள்ளார்.இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். இவ்வாறு பிசியாக இருக்கும் கமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார்.


அதில் ஒரு திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க தேசிங் பெரியசாமி அப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.


இந்நிலையில், இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமல் முடிவெடுத்துள்ளாராம்.விக்ரம் படத்தில் சூர்யா எப்படி ரோலெக்ஸ் ரோலில் வந்த மாஸ் காட்டினாரோ, அதே போல் இந்த படத்தில் கேமியோ நடிக்க கமல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement