• Apr 24 2024

பட்டு வேஷ்டி சட்டையில் மாஸாக நிற்கும் கமல்ஹாசன்- வேற லெவல் தீபாவளி அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுதும் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்பம் 400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.இப்படம் இவருடைய கெரியரில் முக்கியமான தொன்றாகவும் காணப்படுகின்றது.


இதனை அடுத்து இப்படத்தின் பாகம் இரண்டின் உருவாக்கத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.இது தவிர ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.


இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டு வேஷ்டி சட்டையில் கமல் ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 


இதை பார்த்த ரசிகர்கள் அன்றைய அழகு இன்னும் மாறவில்லை என கொண்டாடி வருகின்றனர்.அத்தோடு இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே என்று கூறி வருவதையும் காணலாம்.









Advertisement

Advertisement

Advertisement