• Apr 20 2024

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் குறித்து அன்றே வியந்து பேசிய கமல் ஹாசன்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 95வது ஆஸ்கர் விருது வழக்கும் விழாவில் இந்திய சினிமாவிற்கு இரண்டு ஆஸ்கர்கள் கிடைத்துள்ளது.

இதில் 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற திரைப்படம் தான் ALL QUIET ON THE WESTERN FRONT.இந்த திரைப்படம் Best Cinematography, Best International Film, Best Production Design, Best Original Score என 4 பிரிவுகளிலும் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், 4 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்துள்ள ALL QUIET ON THE WESTERN FRONT படம் குறித்து விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் பேசியுள்ளார்.

ஆம், இதில் பேசிய அவர் ' சமீபத்தில் ALL QUIET ON THE WESTERN FRONT என்ற படத்தை பார்த்து வியந்தேன். 18 வயதில் இருப்பவர்கள் அருமையாக அப்படத்தில் நடித்துள்ளார்கள். இதையெல்லாம் ஏன் நான் இன்னும் செய்யவில்லை என்று கேள்வி எழுந்தது ' என பேசியுள்ளார்.


அன்று வியந்துபோய் கமல் ஹாசன் பாராட்டிய ALL QUIET ON THE WESTERN FRONT எனும் திரைப்படம் இன்று 4 ஆஸ்கர்களை வாங்கி குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement