• Apr 23 2024

தளபதி 67 இல் நடிக்க மறுத்த கமல்ஹாசன்- ஏமாற்றிய விஜய்- வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் மீண்டும் இணைவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 67 டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


தளபதி 67 டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் டைட்டிலும் ப்ரோமோவுடன் வெளியாகி மாஸ் காட்டியது. தளபதி 67 டைட்டிலும் அதேபோல் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தளபதி 67 லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. டைட்டில் ப்ரோமோ வெளியாகும் போது கிட்டத்தட்ட இது உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடும். முன்னதாக இந்தப் படம் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் தான் உருவாகிறது என்றும், இதில் கமல் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.


தளபதி 67 படத்தை முடித்துவிட்டு கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாம். விஜய் அதற்கு ஓக்கே சொல்லிவிட்டால், கமல்ஹாசனும் தளபதி 67ல் கேமியோ ரோலில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் விஜய் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அவரது அடுத்த படத்தின் கால்ஷீட்டும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


 இதனால் கமலும் தளபதி 67ல் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தளபதி 67 விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இல்லாமல் புதிய யுனிவர்ஸாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தளபதி 67ல் இருந்து கமல் விலகியதால் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் அப்செட் ஆனதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


Advertisement

Advertisement

Advertisement