• Apr 20 2024

என் காதலி இவங்க தான்... மேடையில் மனம் திறந்து ஓப்பனாக பேசிய கமல்ஹாசன்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உலகநாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் இறுதியாக 'விக்ரம்' படம் வெளிவந்திருந்தது. அதாவது இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், திரைப்படமான 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி  இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்கிற சிறப்பை பெற்றது. 


மேலும் உலக நாயகன் கமல்ஹாசன், நடித்து... தயாரித்திருந்த இந்த படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில், உலக நாயகன் கமல்ஹாசனுடன்  இணைந்து சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 


இதில் உலக நாயகன் கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம், பிரமாண்ட ஆக்சன் காட்சிகள், பரபரப்பான திரைக்கதை, நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு என இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இதுவரையிலான பல திரைச்சாதனைகளை முறியடித்து, இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிட்டார். 


இந்நிலையில் விக்ரம் படத்தின் 100 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் கமல் பேசிய ஒரு சில விடயங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதாவது மேடையில் வைத்து கமலிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில் யாவுமே மற்றவர்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன.

அந்தவகையில் அந்நிகழ்வில் காதலைப் பற்றி உங்க கருத்து என்ன எனக் கேட்கின்றார்கள். அதற்கு கமல் உடனே சினிமா தான் என் காதலி எனக் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது "கமல்ஹாசன் யார்" எனக் கேட்கின்றார்கள். அதற்கு "கனவில் நான்" எனப் பதிலளிக்கின்றார்.


மேலும் தனக்கு ஆசிரியர் ஆவதில் ஆசை இல்லை எனவும், எப்போதும் மாணவனாகவே இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார். அத்தோடு நீங்க கஷ்டப்பட்டு நடிச்ச பாத்திரம் எது எனக் கேட்கின்றார்கள். அதற்கு கமல் காசு கொடுக்காத பாத்திரம் தான் எனக் கூறுகின்றார். 

அதுமட்டுமல்லாது சினிமாவில் இந்த 63 வருடங்களும் எனக்குத் திருவிழா தான் எனவும் ரொம்ப மகிழ்ச்சியுடன் கூறி இருக்கின்றார். ஒருவர் முழுநேரமாக ஒரே வேலையில் இருக்க முடியாது எனக் கூறுகின்றார். அதற்கு உதாரணமாக உதயநிதி கூட முழுநேர அரசியல் வாதியாக இருந்து விடக்கூடாது எனவும் தெரிவித்து இருக்கின்றார். 

இவ்வாறாக அந்நிகழ்வில் கமல் பேசிய பல விடயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement