• Sep 26 2023

Bigg Boss Season -7 சம்பளத்தை டபுளாக உயர்த்திய கமல்.. அதுவும் இத்தனை கோடியா?

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். பரபரப்பு, பொழுதுபோக்கிற்கும் பஞ்சமே இருக்காது என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. 


சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. அதில் 2 பிக்பாஸ் வீடு என்று கூறி கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்திருந்தார். எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபுறம், இந்த பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார். இந்த சூழலில் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கமல்ஹாசன் 130 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


 எனினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த சீசனில் கமல் ரூ.75 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சீசனில் கிட்டத்தட்ட தனது சம்பளத்தை டபுளாக கமல்ஹாசன் உயர்த்தி உள்ளார். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி செப்டம்பர் 17 அல்லது 24-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எனினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement