• Dec 07 2022

தளபதி 67 இல் ஸ்பெஷல் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்ஹாசன்-தெறிக்கப் போகும் திரையரங்கு

Listen News!
stella / 2 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக இருந்தாலும் தான் இயற்றிய திரைப்படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்து நிற்பவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

இதனை அடுத்து கார்த்தியின் கைதி விஜய்யின் மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இவை சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இதனை அடுத்து கமலின் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


இதனை அடுத்து மீண்டும் தளபதி விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 

இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் விஜய்யுடன் இணைந்து கமல் ஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதன்மூலம் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 'எல்.சி.யு' கான்செப்டில் இணைக்க முயற்சி செய்து விக்ரம் படத்தை தளபதி 67 உடன் இணைத்துள்ளாரா என்று கூற பேச்சு துவங்கிவிட்டது.ஒரு வேலை அப்படி இருந்தால் கண்டிப்பாக திரையரங்கம் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுமட்டுமின்றி கண்டிப்பாக வசூல் ரூ. 500 கோடியை கடந்து மாபெரும் சாதனையை படைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.