• Oct 16 2024

விஜய்சேதுபதியின் ஸ்டைலை போஃலோ பண்ணும் கமல்ஹாசன்- இது என்ன புது ரூட்டாக இருக்கே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து கலக்கி வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனை அடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமும் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

அத்தோடு கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் புதிய திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான விக்ரம் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கமலுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.


இப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, பல புதிய படங்களை தயாரிக்கும் முயற்சியில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் அண்மையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு புதிய படம் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் சில நாட்கள் நடந்த பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. ஒருபக்கம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னுமும் துவங்கப்படவில்லை.


இந்நிலையில், சிம்பு நடிக்கவுள்ள படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். கமல் நடித்தால் அப்படத்தின் வியாபாரத்திற்கு இன்னும் பலம் சேரும். சிம்பு ரசிகர்களின் ஆதரவையும் பெறமுடியும் என கணக்குபோடுகிறாராம். பொதுவாக விஜய் சேதுபதிதான் அதிக கேமியோ ரோலில் வருவார். தற்போது கமல்ஹாசனும் அதை செய்ய ஆரம்பித்து விட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement