• Mar 26 2023

18 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினி -கமல்! அப்போ... தீபாவளிக்கு தரமான சம்பவம் இருக்கு!!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் ரஜினி- கமல் ஆகியோரின் படங்கள் தனி தனியாக வெளியானால் எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.இதில் இருவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் கொண்டாட்டத்தை பற்றி சொல்லியா தெரிய வேண்டும் .

அந்தவகையில் கண்டிப்பாக அந்த அளவிற்கு தமிழ்நாடு திருவிழாவை போல தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும்,இருவரும் மூத்த நடிகர்கள் என்பதால் கண்டிப்பாக ஒரே தினத்தில் படத்தை வெளியிட யோசிப்பார்கள் என்றும்  சொல்லலாம்.

ஆனாலும் இவர்களுடைய படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் வரும் தீபாவளியை முன்னிட்டு ஒரே தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை ரஜினி – கமல் படங்கள் ஒரே தினத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான கமலின் மும்பை எஸ்பிரஸ் படமும், ரஜினியின் சந்திரமுகி படமும் ஒரே தினத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட, 18-ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி-அஜித் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement