லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு மகனாகநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்

85

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் , கைதி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இவ்வாறான ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாகநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்க உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார்.