• Mar 28 2023

வெளியானது காமெடி போலீஸாக காஜல் அகர்வால் நடிக்கும் 'கோஷ்டி' திரைப்படத்தின் டிரைலர்.. அடடே சிரிப்பு அடக்க முடியலயே..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

'குலேபகாவலி, ஜாக்பாட்' போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் 'கோஸ்டி'. இப்படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கின்றனர். 


காமெடி கதையம்சம் கொண்ட பேய் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் காமெடி போலீஸ் ஆக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். மேலும் சாம் சி.எஸ் இப்படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்து உள்ளார். 

இப்படம் ஆனது வருகிற மார்ச் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் உடைய டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. காமெடி காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலரினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement