• Apr 20 2024

பார்ப்போரை வியக்க வைத்த காஜல் அகர்வால்... உடலை வில்லாக வளைத்து இப்படி மாஸ் காட்டுறாரே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'விக்ரம்' படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் இணைந்து பிசியாக நடித்து வருகிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு ஆனது லைகா மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓராண்டுக்கு மேலாக தாமதம் ஆன நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு, மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

மேலும் சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அதேபோன்று நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் கர்ப்பமானதால் 'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி இருந்தன.  ஆனால் இதுகுறித்து காஜல் தரப்பில் இருந்தும், இந்தியன் 2 படக்குழு தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


இந்நிலையில் குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் காஜல் அகர்வால் 'இந்தியன் 2' படத்திற்கு தயாராகி வருகிறார். அதாவது சமீபத்தில் இந்த படத்திற்காக குதிரை ஓட்டும்  பயிற்சி மேற்கொண்ட காஜல் தற்போது, களரி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றினை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது, "களரிப்பயிற்சி  என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலையாகும்,.

இது 'போர்க்களத்தின் கலை பயிற்சி' இந்த கலை வடிவத்தின் மந்திரம் ஷாலின், குங் ஃபூ மற்றும் அதன் விளைவாக கராத்தே மற்றும் டேக்வாண்டோ போன்ற கலைகள் பிறப்பிற்கு காரணமாக அமைந்தது" என்கிறார்.


மேலும் "களரி பொதுவாக கொரில்லாப் போருக்குப் பயன்படுத்தப்பட்டது மற்றும் இந்த பயிற்சி கற்பவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் ஒரு அழகான கலை. இதனை எனக்கு கற்றுக் கொடுப்பவருக்கு நன்றி" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது செம்ம பிட்டாக மாறியுள்ள நடிகை காஜல் அகர்வால், உடலை வில்லாக வளைத்து பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றினையும் பகிர்ந்ந்திருக்கின்றார். இந்த வீடியோ ஆனது பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது. 


இவ்வாறாக காஜல் அகர்வால் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருவதால், கண்டிப்பாக இப்படமானது அவருக்கு சிறந்த கம் பேக் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement